50 வயதாகும் நடிகர் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம் – நல்ல சேதி சொன்ன அப்பா!

Author: Shree
6 April 2023, 5:07 pm

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இவரது தந்தை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவர். தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து செம்பருத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் திசை திருப்பினார்.

தொடர்ந்து ஜீன்ஸ், ஜோடி, வின்னர் , லண்டன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார். ஈர்த்து வாழ்க்கையையே காலி செய்தது அவரது திருமண வாழ்க்கை தான். ஆம், பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

50 வயதாகும் பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் ஹிந்தியில் செம ஹிட்டடித்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக ‘அந்தகன் ‘என்ற பெயரிடப்பட்ட படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிரசாந்த் தந்தை தியாகராஜன் அவரது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது, பிரசாந்த் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்து. காதல் திருமணம் செய்திருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாரோ என பலமுறை யோசித்துள்ளேன். அது போகட்டும்… தற்போது பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் வெளியான அடுத்த மாதமே அவருக்கு இரண்டாவது திருமணம் தான் என்று கூறியிருக்கிறார். 50 வயதாகும் பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!