10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு நீதிமன்றம் புகட்டிய பாடம் ; ஒரே வாரத்தில் 2 பேருக்கு நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 7:17 pm

திண்டுக்கல் : பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ராமநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமியை வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கானது திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி ராமராஜ்க்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வாரத்தில் இரண்டு நபர்கள் பாலியல் வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?