அந்தரங்க வீடியோவை லீக் பண்ணிருவேன்… பிரபல நடிகருக்கு பகிரங்க மிரட்டல்!!
Author: Vignesh7 April 2023, 4:30 pm
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, அக்கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனிடையே, பாஜகவில் சினிமா, விளையாட்டு உள்பட பல்வேறு துறையின் பிரபலங்களும் இணைவது வாடிக்கையாகி வருகிறது.
இதனிடையே, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது.
கருத்துக்கணிப்பு படி ஆளும் பாஜகவுக்கு வெற்றி கிடைப்பதில் சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவினர் இந்தக் கருத்து கணிப்பை போலி எனக் கூறி வருகின்றனர்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் கிச்சா சுதீப்.
இந்த நிலையில், பிரபல நடிகரும், கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் சுதீப் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்தால் அவரது அந்தரங்க வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சுதீப்பிடம் கேட்டபோது, இந்த விசயத்தை யார் செய்திருப்பார்கள் என்று எனக்கு தெரிந்த ஒன்று தான், அது சினிமா சம்பந்தப்பட்டவராக தான் இருப்பார் என்று சுதீப் தெரிவித்து உள்ளார்.
அப்படி அந்தரங்க வீடியோ இருப்பது உண்மை என்று கன்னட சினிமா வட்டாராத்தில் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்கள்.