சீரியல் நடிகை திவ்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு… இப்போவாச்சும் சேர்ந்து வாழ்வரா அர்னவ்?

Author: Shree
7 April 2023, 5:04 pm

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள்.

அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.’

திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்தார். எவ்வளவோ பேசியும் காதலை தெரிவித்தும் அர்னவ் புறிந்துக்கொண்டு திவ்யாவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அர்னவ் தற்போது சீரியல் நடிகை அன்ஷிதா என்பவரை காதலித்து வருகிறார்.

இதனால் கடுங்கோபமடைந்த திவ்யா திவ்யா அர்னவ்ர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அர்னவ் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என திவ்யா மனம் வருந்தி கூறி வந்தார்.

இந்நிலையில் திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிஞ்சு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘இந்த காத்திருப்பு நீண்டது ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனையற்றது.

என்னில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் விசித்திரக் கதைகளைப் போல என்றென்றும் உங்களில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பே தேவதை! என் அழகான பெண் குழந்தை. எனது பயணம் முழுவதும் உங்கள் ஆதரவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி, தயவுசெய்து தொடர்ந்து வரவும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார். இனிமேலாவது அர்னவ் சேர்ந்து வாழ்வரா? இந்த பெண் குழந்தை நல்ல ஆசீர்வாதங்களோடு வளரட்டும் என நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?