100-ரூபாய்க்கு அந்த காட்சியில் நடிச்சு உயிரைவிட்ட காமெடி நடிகர் – உண்மையை உடைத்த மனோபாலா..!
Author: Vignesh8 April 2023, 10:30 am
காமெடி நடிகர் கருப்பு சுப்பையா மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர். கவுண்டமணியும் இவரும் சேர்ந்த கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து பின்னர் பிரபலமானார்.
அதனையடுத்து, பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்திருந்தார். இறுதியாக கங்கையமரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தில் நடித்து இருந்தார்.
ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் என்னும் கேரக்டர், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கேரக்டர், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அறுவை செய்யும் கேரக்டர் ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மனோ பாலா கருப்பு சுப்பையா இறப்பு குறித்து மௌனம் கலைத்துள்ளார். அதில், ‘சினிமாவில் ட்ரெண்டிங்கில் இல்லை என்றால் சீண்டக் கூட மாட்டார்கள் என்றும், எத்தனையோ பேர் அப்படி சினிமாவில் அழிந்து இருக்கிறார்கள்.
அப்படித்தான் கருப்பு சுப்பையா எல்லாம் ரூ.100 பணத்திற்காக உடல் முழுவதும் சுப்பையா பெயிண்ட் அடிக்க சொன்னார்கள். அந்த பெயிண்ட் எல்லாம் அவருடைய உடலுக்குள் சென்று விட்டதால் நாளடைவில் உடல்நிலை குன்றி கவனிக்க ஆள இல்லாமமலும் போனதால் மிகவும் மனமுடைந்து போனார் கருப்பு சுப்பையா. இதனால் கடந்த 2013ஆம் ஆண்டு கேட்க ஆளின்றி நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக இறந்து போனார் எனத் தெரிவித்துள்ளார்.