அபராதம் போட்டு அலுத்து போச்சு… ஹெல்மேட் , சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு லட்டு, சாக்லெட் : ரூட்டை மாற்றிய போலீசார்!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 11:43 am

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் லட்டு, சாக்லெட் கொடுத்து பாராட்டினர்.

ஹெல்மேட் போடவில்லை, சீட் பெல்ட் போடவில்லை என்று எத்தனை முறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அபாரதம் விதித்தும் பலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.

எனவே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறையினர் கொஞ்சம் வித்தியசமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தும் விதமாகவும் கொஞ்சம் மாற்றி யோசித்துள்ளனர்.

அதாவது, ஹெல்மேட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களையும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளையும் பாராட்டிய போக்குவரத்து காவல்துறையினர், அவர்களுக்கு லட்டு, சாக்லெட் கொடுத்து நன்றி கூறி உற்சாகப்படுத்தினர். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வழக்கம் போல ஹெல்மெட் போடாமல், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அறிவுரைகளை கூறி, விதிமுறைகளை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அபராதம் போட்டு அலுத்து போச்சு.. சாக்லெட் கொடுத்து இருக்கிறோம். இனியாவது போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கடைபிடிப்பார்களா என்று பார்ப்போம் என்கின்றனர் கோவில்பட்டி போக்குவரத்து காவல்துறையினர்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!