நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நுரையீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகள்!!!
Author: Hemalatha Ramkumar8 April 2023, 7:28 pm
2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி நுரையீரல் புற்றுநோயானது அனைத்து வகையான புற்றுநோய் இறப்புகளில் 8.1% ஆகும். நுரையீரல் புற்றுநோய் பல காரணிகளால் ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான மிகப்பெரிய ஆபத்து காரணி புகைபிடித்தல் மற்றும் உலகின் பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்க்கு இதுவே காரணமாகும்.
இது தவிர, புகை, காற்று மாசுபாடு மற்றும் ரேடான், ஆஸ்பெஸ்டாஸ் போன்ற இரசாயனங்களின் வெளிப்பாடும் நுரையீரலில் புற்றுநோயை உண்டாக்குகிறது. நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்த முடியும். இதற்கு நோயை அடையாளம் காண்பது முக்கியம். ஆகவே, நுரையீரல் புற்றுநோயின் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோள்பட்டையில் வலி அல்லது பலவீனத்தை அடிக்கடி கவனிக்கிறார்கள். இதற்கு கட்டி வளர்ச்சியே காரணம். கட்டி தோள்பட்டை மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். தோள்பட்டை வலி தோளில் உள்ள நரம்பில் காணப்படும் வலியின் காரணமாக இருக்கலாம் மற்றும் புற்றுநோய் தோள்பட்டை வரை பரவியதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
டிஸ்ஃபேஜியா எனப்படும் விழுங்குவதில் உள்ள சிரமம் நுரையீரல் புற்றுநோயின் ஒரு சிக்கலாகும். இதில் உணவு செல்லும் பாதை தடைபடுகிறது.
இந்த நிலை வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் மற்றும் மெலனோமா ஆகியவற்றிலும் ஒரு சிக்கலாகும்.
நுரையீரல் கட்டி மார்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும்போது அல்லது நரம்புகளில் அழுத்தினால், உங்கள் மார்பில் வலியை உணரலாம், குறிப்பாக ஆழமாக சுவாசிக்கும்போது, இருமல் அல்லது சிரிக்கும்போது வலி உண்டாகும்.
மார்பு வலி என்பது மாரடைப்பு போன்ற பல உயிருக்கு ஆபத்தான நோய்களின் குறிகாட்டியாகும். இது பெரும்பாலும் இரைப்பை அல்லது சில லேசான தற்காலிக பிரச்சனையாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
புற்றுநோய் குரல்வளை நரம்பை அழுத்தும் போது, ஒரு நபருக்கு கரகரப்பான குரல் உண்டாகிறது. நுரையீரல் புற்றுநோயாளிகளின் குரல் கரகரப்பானதாக இருப்பதற்கான மற்றொரு காரணம், நாள்பட்ட இருமல், இந்த புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். இது குரல் நாண்களில் குறுக்கிடுகிறது.
கழுத்து மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை நுரையீரல் புற்றுநோயைக் குறிக்கலாம். நுரையீரலில் உள்ள புற்றுநோய் வளர்ச்சியானது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது இது நிகழ்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.