ஜோஷியம் பார்த்து அஜித் நடித்த படம்… வாரி குவித்த வசூல் – என்ன படம் தெரியுமா?

Author: Shree
8 April 2023, 9:12 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் பலவேறு ஹிட் படங்களில் நடித்து இன்று டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் நடிப்பை தாண்டி சிறந்த மனிதர் என்பதை அவரிடம் பழகிய பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பளர்களுக்கு பலகோடி லாபம் கொட்டி ஒரே படத்திலே லட்சாதிபதி ஆகிவிடுவார்கள்.

ajith mangatha-updatenews360

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் , ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் தான் அஜித்தின் தந்தை மரணமடைந்தார்.

Ajith-updatenews360

இந்நிலையில் அஜித் குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நடிகர் அஜித் ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உடையவராம். தனது 50வது படமான மங்காத்தாவின் வெற்றியை நடிப்பதற்கு முன்பே ஜோசியம் பார்த்து கணித்துவிட்டுத்தான் நடித்தாராம். ஆனால், அவர் எதிர்பார்த்ததை விட அப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து சாதனை படைத்து வசூல் குவித்தது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!