கொரோனாவுக்கு அடுத்தடுத்து இரு பெண்கள் பலி… உச்சம் தொடும் அச்சம் : கோவையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 11:54 am

கோவை வடவள்ளியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் காய்ச்சல் ஏற்பட்டது. இதை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?