வடிவேலு நல்லா குடிப்பார்.. அவர் வடிவேலு இல்ல குடிவேலு: பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு

Author: Rajesh
9 April 2023, 2:40 pm

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.

vadivelu- updatenews360

சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நடிகர் வடிவேலு குறித்து சக நடிகர் நடிகைகள் நெகட்டிவான கருத்துக்களை தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட வடிவேலு, அப்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்தார். செல்லும் இடமெல்லாம் அவரை ஒரு குடிகாரர் என்றும் விளாசித் தள்ளினார் வடிவேலு. அப்போது வடிவேலுவின் பிரச்சாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தமிழில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி, வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அவர் பேசியதாவது: “விஜயகாந்தை குடிகாரர்னு சொல்லும் வடிவேலு மட்டும் குடிக்க மாட்டாரா. அவரும் குடிகாரர் தான். நல்லா குடிப்பார். அவரை வடிவேலு இல்லை குடிவேலுனு தான் சொல்வார்கள்.

அன்றைய காலகட்டத்தில் வடிவேலுவுக்கு கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதன் காரணமாக அவர் விஜயகாந்தை தாக்கி பேசினார். வடிவேலு பகலில் குடிக்க மாட்டார். இரவில் தான் குடிப்பார். வடிவேலுவிடம் 2 லைன் சொன்னா போதும், அதை சீன்னாக ஸ்பாட்டிலேயே டெவலப் செய்துவிடுவார். அப்படி ஒரு மாபெரும் கலைஞன். விஜயகாந்த் குடிப்பதில் பாகுபாடு காட்டமால், மேக்கப் மேன், காஸ்டியூமர் ஆகியோருடனும் சரளமாக அமர்ந்து குடிப்பார். விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு அவரது குடிப்பழக்கம் காரணமில்லை” என்றும் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 897

    0

    0