ஒரே சிறையில் பெண் உட்பட 44 பேருக்கு எய்ட்ஸ்… ஹெச்ஐவி பரவியது எப்படி? விசாரணையில் பகீர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 10:05 am

ஒரே சிறையில் பெண் உட்பட 44 பேருக்கு எய்ட்ஸ்… எச்ஐவி பரவியது எப்படி? விசாரணையில் பகீர்!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு எச்ஐவி வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் கைதிக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏறுபடுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து, அங்குள்ள டாக்டர் கூறுகையில், சிறையில் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட கைதிகளின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதிகளின் சிகிச்சை நிலவரம் குறித்து பேசிய டாக்டர், எச்ஐவி நோயாளிகளுக்காக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. என்றுகுறிப்பிட்டார் .

மேலும், ‘எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவர் குறிப்பிட்டார்.

தற்போது ஹல்த்வானியில் உள்ள சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?