சிறுவனுக்கு உதட்டோடு உதடு முத்தம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 12:31 pm

திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ எங்கு, அப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் சம்பவம் தொடர்பான வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

அதில், மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய் லாமாவிற்கு மரியாதை செலுத்துவதற்காக மேலே வந்துள்ளார். அப்போது அருகே வந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர்.

அதைதொடர்ந்து சில விநாடிகளுக்குப் பிறகு வாயிலிருந்து தனது நாக்கை வெளியே நீட்டிய தலாய் லாமா, அதனை முத்தமிடுமாறு தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.

முதலில் ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக சிறுவன் பின்னே சென்றுள்ளான். ஆனால், தலாய் லாமா அவனது கையை பிடித்து இருந்ததால், தலாய் லாமாவின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டார்.

தற்போது சிறுவனுக்கு முத்தமிடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து தலாய் லாமாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

தலாய் லாமா செய்தது அத்துமீறல் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வர, மற்றொரு தரப்பினரோ தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என நியாயப்படுத்தி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!