ஆளுநரை எதிர்த்தால் CM ஸ்டாலினுக்கு தான் ஆபத்து.. அவங்க வாயை மூடிக்கிட்டு இருந்தால் திமுக ஆட்சி நிலைக்கும் : எச்சரிக்கும். எச்.ராஜா!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 9:19 pm

திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த விவகாரங்கள் குறித்து பேசாமல் இருந்தால் நல்லது என்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு பாஜக பிரமுகர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேசியதாவது :- கூடங்குளம் அனல் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி வருவதாகவும் தூண்டுதல் பெயரில் நடப்பதாகவும் கூறியிருந்தார். தேபோன்று ஸ்டெர்லைட் போராட்டத்தின் போதும் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி வந்துள்ளது என்று கூட்டத்தை ஒரு சிலர் தூண்டுதலில் பெயரில்தான் நடந்து வருகிறது என்று பலர் கூறினர். நூறாவது நாள் போராட்டத்தின் போது மாதா கோவிலில் மணி அடித்து கூட்டத்தை கூட்டப்பட்டது.

அந்நிய தலையிடும் இதில் உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளது.மதத் தலையீடு என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது. ந்த நாட்டின் வளர்ச்சியை விரும்பாத தீய சக்திகள் குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தயார் செய்யப்பட்ட காப்பர் 40 சதவீத தேவையை பூர்த்தி செய்து வந்தது அது மூடப்பட்டால் நாம் சீனாவிடம் இருந்து தான் காப்பர் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநிலக் கட்சிகள் தலையீடு என்பது இல்லை ஏனென்றால் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது அதிமுக. 2010 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஆ ராசா. எனவே ஆளுநருக்கு இதுகுறித்த தகவல்களும் தரவுகளும் ஆதாரங்களும் கைவசம் உள்ளன.

இந்த விவகாரத்தில் ஆளுநர் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே. முதுகெலும்பு தைரியம் உள்ளவர்கள், ஆம்பிள்ளையானவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி கட்சிகளோ, திமுக அமைச்சர்களோ பேசினால், அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும். இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்பும் திமுக கூட்டணி கட்சிகள், இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லது.

தீர்மானத்திற்கு எதிராக மரியாதை இல்லை என்ற தீர்மானத்தை இன்றைக்கு சட்ட சபையில் திமுக கொண்டு வந்துள்ளது. இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், நாளை ஆளுநர் இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார். அதானி விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும் அரசுக்கு எந்த விதமான இழப்பும் நடக்கவில்லை.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு எதிராக இரண்டு நாட்கள் காங்கிரஸ் பங்கு பெறாமல் முடக்கியது. அதன் பிறகு இரண்டு நாட்களில் காங்கிரஸ் வாயை மூடிக்கொண்டு பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது. இந்த இரண்டு நாளில் நடந்தது என்ன..?
காங்கிரஸ் மனம் மாறியது, அதை மாற்றியவர் யாரோ..?

கர்நாடகா தேர்தலுக்காக இணை பொறுப்பில் அண்ணாமலை இருப்பதால் அங்கு முக்கியமான கூட்டம் ஒன்று டெல்லியில் வேட்பாளரை தேர்வு செய்வதில் நடந்து வருகின்றது. அதனால் தான் பிரதமர் மோடி பங்குபெற்ற தற்போதைய விஜயத்தில் அண்ணாமலை பங்கு பெற முடியவில்லை. இந்த விஷயம் மூத்த பாஜக நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் தெரியும். இந்த முறை அண்ணாமலை பிரதமரோடு இல்லாததற்கு ஒரு அசாதாரணமான சூழ்நிலை. அதனால்தான் அவர் பங்கு பெறவில்லை.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொளுத்தி போடுவதற்கு வேறு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் அறியாமை காரணமாக பல்வேறு விதமான கருத்துக்களை பலர் வெளியிட்டு வருகின்றனர்.

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மத்திய அமைச்சர் தமிழகத்தில் மூன்று இடங்களும் ரத்து செய்யப்படுகிறது என்று யாருக்கு தகவல் கொடுத்தார். அண்ணாமலைக்கு மட்டுமே அவர் தகவல் கொடுத்தார். அவர் வெளியிட்ட அறிக்கையால் தான் அது வெளியே தெரிந்தது
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அண்ணாமலை கேட்டதால் தான் மத்திய அமைச்சர் நிலக்கரி சுரங்க அனுமதியை ரத்து செய்தார்.

அதிமுக – பாஜக உறவு நன்றாக உள்ளது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரிடமும் பாஜக பேலன்ஸ் பண்ணி தான் நடந்து வருகிறது. ஒன்றுபட்ட அதிமுக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பாஜக கூட்டணி கட்சி என்ற முறையில் அறிவுறுத்தியது. ஆனால் இது அவர்கள் முடிவு.
இந்த விஷயத்தில் பாஜக தலையீடு கிடையாது. கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை நாடாளுமன்ற மக்களுக்கு மறந்து விட்டது.
கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளில் அதிக அளவு சொத்து வாங்கி போட்டவர்கள். அதனால்தான் என்னை வெளிநாட்டிற்கு அவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

தேர்தலில் சன்னியாசம் வாங்க போகிறேன் என்று நான் கூறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் எவ்வளவு பேர் நிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு அண்ணாமலை மட்டும் பிரச்சாரம் செய்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால், தமிழிசை சௌந்தர்ராஜன், சி பி ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்ற மூத்த நிர்வாகிகள், ஆளுநர் பதவிக்கு சென்று விட்டனர். ஆகையால், அண்ணாமலைக்கு உறுதுணையாக நான் மத்த வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக, தேர்தலில் விலகி இருப்பதாக தான் கூறினேனே தவிர, தேர்தல் அரசியலில் இருந்து சன்னியாசம் வாங்கி விட்டதாக கருத வேண்டாம்.

ராஜா அரசியலில் தொடர்கிறார். இந்துக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக நான் கண்டிப்பாக அரசியலில் தொடர்வேன்.
ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள், இவ்வாறு அவர் பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 471

    0

    0