ஆசை நாயகியுடன் கள்ள உறவில் இருந்த இன்ஸ்பெக்டர்… வீடு தேடிச் சென்று புரட்டியெடுத்த மனைவி… லுங்கியோடு மல்லுக்கட்டிய காவலர்..!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 4:35 pm

ஆந்திரா: குழந்தைகளுடன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் கணவனை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவியால் பரபரப்பு நிலவியது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை போலீசில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும், சாம்ராஜ்ஜியம் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர்.

2017ம் ஆண்டு மனைவியை கைவிட்ட வாசு அடுத்த ஆண்டு மௌனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமீபகாலமாக நெல்லூரில் உள்ள போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார். தன்னை குழந்தைகளுடன் கைவிட்டு சென்ற கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த சாம்ராஜ்யத்திற்கு இந்த தகவல் கிடைத்தது.

இதுதான் சமயம் என்று கருதி காவல் ஆய்வாளரின் ஆசை நாயகி வீட்டுக்கு உறவினர்களுடன் சென்ற சாம்ராஜ்யம், கதவை தட்டி திறக்க செய்து தன்னுடைய கணவன், அவருடைய ஆசை நாயகி ஆகிய இரண்டு பேருடனும் வாக்குவாதம் செய்து இது நியாயமா என்று தட்டிக் கேட்டார். உறவினர்கள் முன்னிலையில் கள்ளத்தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளரை அவருடைய மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டிக் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெல்லூர் போலீசார் விரைந்து சென்று ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வாசு, அவருடைய மனைவி சாம்ராஜ்யம் ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?