செரிமான பிரச்சினைகளை விலக்கி வைக்கும் பிராக்கோலி!!!
Author: Hemalatha Ramkumar12 April 2023, 10:05 am
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறி குடும்பத்தை சேர்ந்த பிராக்கோலி தென்னிந்தியாவில் மிகக் குறைவாகவே உண்ணப்படுகிறது. காலிஃபிளவர் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த காய்கறி பல விதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. உங்கள் அன்றாட உணவில் பிராக்கோலி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.
வேகவைத்த ப்ரோக்கோலியை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உணவில் காய்கறிகளை, குறிப்பாக பிரோக்கோலியை அதிகரிப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோயைத் தடுக்கக்கூடிய எந்த ஒரு சூப்பர்ஃபுட்களும் கிடையாது. எனினும், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. பிரோக்கோலி புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சேர்மங்களின் மூலமாகும்.
பிரோக்கோலியில் உள்ள கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற வயது தொடர்பான கண் கோளாறுகள் குறைவதற்கான அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது. பிரோக்கோலியில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.
ப்ரோக்கோலி, இண்டோல்-3-கார்பினோல் (I3C) எனப்படும் தாவர கலவையைக் கொண்டுள்ளது. இது தாவர ஈஸ்ட்ரோஜனாக செயல்படுகிறது மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. கந்தகம் நிறைந்துள்ளதால், பிரோக்கோலி குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. மேலும் தொற்று ஏற்படுவதில் இருந்து செல்களை பாதுகாக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.