தனுஷ் யார் மகன்? மரண படுக்கையிலும் பாசப்போராட்டம்: உண்மையை உடைத்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியின் வழக்கறிஞர்..!

Author: Vignesh
12 April 2023, 12:30 pm

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் தனுஷ்யை தன்னுடைய மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் உரிமை கொண்டாடி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

ஆனால் நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை ரத்து செய்ய கோரி, மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.

dhanush meenakshi kathiresan-updatenews360

இதனிடையே, கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், கதிரேசன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக வழக்கறிஞர் தற்போது தெரிவித்துள்ளார்.

dhanush meenakshi kathiresan-updatenews360

அதுமட்டுமின்றி அவரின் DNA டெஸ்ட் எடுத்து அதை பராமரிக்க வேண்டும் என்று மதுரை அரசு மருத்துவ கல்லூரி Din இடம் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். மேலும் அதே டீன் தனுஷை பரிசோதித்த போது அவர் தனது அங்க அடையாளங்களை லேசர் மூலம் அழித்து உள்ளார் என்று டீன் ரிப்போர்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

dhanush meenakshi kathiresan-updatenews360

மேலும், ஏன் தனுஷ் தனது அங்க அடையாளங்களை அழிக்க வேண்டும் எனவும், அதே மாதிரி அவரின் காலேஜ் மற்றும் பள்ளி சான்றிதழ்கள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் கொடுத்ததாகவும், இதை வைத்து பார்க்கும் பொழுது அவர் நிச்சயமாக கதிரேசன் – மீனாட்சி மகன் தான் என்று உறுதியாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?