அந்த விஷயத்தில் நீ வேஸ்ட்… 10 நாளில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்!
Author: Shree12 April 2023, 11:43 am
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய்க்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளார். தளபதி என்றாலே தாறுமாறு தான். அவர் என்ன செய்தாலும் அதை திருவிழா போன்று கொண்டாடி தீர்த்து விடுவார்கள் தளபதி பேன்ஸ்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் மும்முராக விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம்தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 2ம் தேதி புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கினார். அதில் லியோ படத்தின் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு “ஹலோ நண்பாஸ் அண்ட் நண்பிஸ்” என கேப்ஷன் கொடுத்து அது பற்றி ஓவர் நைட்டில் பேசப்பட்டார்.
இதுவரை டுவிட்டர் கணக்கை மட்டும் கொண்டிருந்த விஜய் இன்ஸ்டாக்ராமை ஓப்பன் செய்த 10 நாளில் 6.7 மில்லியன் பாலோவர்ஸ் வந்துவிட்டனர். இவ்வளவு குறுகிய நாளிலேயே பிரம்மிக்க வைக்கும் சாதனை படைத்திருக்கும் விஜய்யை பார்த்து பிரபலங்களே மிரண்டுவிட்டனர். இந்த விஷயத்தில் விஜய்க்கு முன்னர் இன்ஸ்டாகிராம் துவங்கிய சூர்யாவே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 6.6 மில்லியன் பின்தொடர்பவர்களை நடிகர் சூர்யா கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.