10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது குண்டாஸ்… கோவையில் 4 மாதத்தில் 4 போக்சோ குற்றவாளிகள்.. காவல்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்..!

Author: Babu Lakshmanan
13 April 2023, 9:00 am

கோவை ; கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி பரிந்துரையை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படித்து வந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக ஆசிரியர் ஆறுமுகம் (54) என்பவர் மீது துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, அவர் பாலியல் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். அதன்படி, அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்படி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 4 போக்சோ குற்றவாளிகள் உட்பட 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…