“மறுபடியும் முதல்ல இருந்தா”.. கர்ப்பணியாக இருக்கும் சீரியல் நடிகையிடம் மீண்டும் சண்டையை ஆரம்பித்த ஸ்ரீநிதி..!(வீடியோ)

Author: Vignesh
13 April 2023, 12:15 pm

சமீபமாக அதிக சர்ச்சைகளில் நடிகை ஸ்ரீநிதியின் பெயர் அடிப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் நடித்து வந்த அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். சிம்புவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதற்கிடையே சீரியல் நடிகை நக்‌ஷத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியிருந்தார் ஸ்ரீநிதி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நக்‌ஷத்ரா. இதன் மூலம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானார்.

srinithi-updatenews360

பொதுவாக சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ஒருத்தரை ஒருவர் நன்றாக புரிந்தவர்களாக தான் இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக நடித்து வருவதால் இவர்களின் நட்பு நாளுக்கு நாள் வளர ஆரம்பிக்கிறது.

அந்த வகையில் “யாரடி மோகினி” சீரியலில் இணைந்து நடிப்பதால் நண்பர்களாக சுற்றி திரிந்தவர்கள் தான் நடிகை நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி.

srinithi-updatenews360

இவர்கள் இருவரும் சின்னத்திரையில் இருக்கும் போது நண்பர்களாக இருந்த நிலையில், நட்சத்திராவின் திருமணத்தின் போது இருவருக்கும் இடையில் பலத்த சண்டை வெடித்ததை தொடர்ந்து ஸ்ரீநிதி நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும், அவர் வீட்டின் முன் நின்று போராட்டம் செய்வதாகவும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி அதிர்ச்சி கொடுத்தார்.

srinithi-updatenews360

இதனிடையே, தற்போது நடிகை நட்சத்திரா திருமணம் முடித்து கர்ப்பமாக இருக்கிறார். இந்த விசயத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததிலிருந்து அவருடைய பழைய சீரியல்கள் நடிகைகள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர ஆரம்பித்து உள்ளார்கள்.

srinithi-updatenews360

இதனிடையே, இவர்கள் செய்யும் சேட்டைகளை புகைப்படங்களாவும், வீடியோக்களாவும் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.

srinithi-updatenews360

அந்த வகையில், நடிகை நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி இருவரும் ஒன்றாக மீண்டும் சேர்ந்த நிலையில், இருவரும் சண்டையிடுவது போன்று ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள்,“நீங்க மீண்டும் சேர்ந்தீட்டிங்களா?” என கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர்.

https://www.youtube.com/watch?v=ozkBJu0KcQI&t=11s
  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 589

    0

    0