என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்… காதல் இன்னும் இருக்கு – குஷ்பு ட்வீட்!

Author: Shree
13 April 2023, 3:16 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அண்மையில் குஷ்பு புளூ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பிக்கட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

kushbhoo chinnathambi

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், பிரபு – குஷ்பு நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆவதை நினைவு கூர்ந்து அது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சின்னதம்பி திரைப்படம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன்.

Kushboo chinnathambi

என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் இசைக்காகவும் கே.பாலுவுக்கும் என்றும் நன்றி. நந்தினி அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்துள்ளார். மீண்டும் ஒருமுறை நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் பிரபு மீதுள்ள காதலை தான் இப்படி வேறு கோணத்தில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் குஷ்பு என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…