லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து… அப்பளம் போல நொறுங்கிய முன்பகுதி ; ஓட்டுநர் உள்பட 2 பேர் பலி!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 4:43 pm

ஆம்னி பேருந்து லாரி மீது மோதி பயங்கர விபத்து, ஓட்டுனர் உட்பட இருவர் பலியாகி உள்ள நிலையில் 11 பேர் கவலைக்கிடமான நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…

கோவையில் இருந்து சென்னை வரை செல்லும் பாக்கியலட்சுமி டிராவல்ஸ் க்கு சொந்தமான ஆம்னி பேருந்து இன்று காலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பாலமுருகன் உட்பட 48 பேர் பயணம் செய்துள்ளனர்.

இன்று அதிகாலையில் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் மேம்பாலம் சென்றபோது பேருந்து முன்பாக சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத பயங்கரமாக மோதியுள்ளது. இதில் பேருந்து முன்புறம் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், ஓட்டுனரும் பயணி ஒருவரும் பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், பலத்த காயம் அடைந்து அலறியபடி இருந்த 11 பேருந்து பயணிகளையும் பத்திரமாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து பெருந்துறை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஓட்டுநர் பாலமுருகன் மற்றும் பேருந்து பயணி ஜான் நேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜான் நேசன் மனைவியின் கண்ணெதிரே உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார்.. பெருந்துறை அருகே நடைபெற்ற இந்த கோர விபத்தின் காரணமாக ஓட்டுனரும் பேருந்து பயணங்களில் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • nazriya nazim fahadh open talk about why her absent in social media காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!