இந்த படம் மட்டும் வந்திருந்தா.. விஜயகாந்த் போட்ட பக்கா ப்ளான்: கடைசில இப்படி ஆயிருச்சே..!

Author: Vignesh
13 April 2023, 7:00 pm

50கால கட்டத்தில் இருந்தே நடிகர் சங்க பிரச்சினைகள் இருந்து கொண்டே இருந்தது.ஆனால் விஜயகாந்த் தான் அதற்கு சரியான முறையில் தீர்வு கண்டார். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் நான்கும் மொழிகளையும் உள்ளடக்கிய சங்கமாக செயல்பட்டது.

mgr sivaji-updatenews360

இதனிடையே, நடிகர் சங்கத்தின் முக்கியமான கடமையே நடிகர், நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது. அந்தக் காலத்தில் MGR விருப்பத்திற்கு உடன்பட்டு, சிவாஜி சிறிது காலம் நடிகர் சங்கத்திற்கு தலைவராக இருந்தார். அவரை தொடர்ந்து மேஜர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

vijaykanth-updatenews360

இவர்களை தொடர்ந்து, 80கள் காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் தலைமை ஏற்று, பெரும் கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை மீட்டு வருவதற்கு எத்தனையோ முயற்சிகளை கையாண்டார். அதில் ஒன்று தான் பிரபு, கார்த்திக், சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து விஜயகாந்தும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தது.

vijaykanth-updatenews360

80கள் காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பிரபு, கார்த்திக், சத்யராஜ், விஜயகாந்த் ஆகிய நான்கு நடிகர்களுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே நடிகர் சங்கத்தை காப்பாற்ற ஒரு படம் நடித்துக் கொடுப்போம் என நான்கு பேரும் முடிவு செய்தனர். இதற்காக, இளையராஜா இசையமைக்க ‘இவர்கள் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தலைப்பில் படத்திற்கான பூஜையும் போடப்பட்டு, என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. படம் பூஜையுடனேயே நின்று விட்டது.

vijaykanth-updatenews360

இதனையடுத்து, அந்தப் படத்தை எடுக்க எவரும் முன்வரவில்லை. அதன் பிறகு தான் விஜயகாந்த் அத்தனை நடிகர்களையும் ஒன்று திரட்டி வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன்தொடர்ச்சியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலைகளும் நடைப்பெற்று வருகிறது. மேலும், அதற்கான முனைப்புடன் நடிகர் விஷால் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

vishal - updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 964

    9

    3