அம்மானா சும்மா இல்லடா..? முதலையிடம் இருந்து குட்டியை காப்பாற்றிய தாய் யானை.. நெகிழ வைக்கும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 April 2023, 4:30 pm

தண்ணீர் குட்டையில் குட்டியை தாக்க வந்த முதலையிடம் இருந்து குட்டியை தாய் யானை போராடி மீட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது பந்திப்புர் புலிகள் சரணாலயம். அங்கு கோடை காலத்தையொட்டை வனவிலங்குகளின் தேவைக்காக குட்டை ஒன்றில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் தனது குட்டியுடன் யானை ஒன்று தண்ணீர் குடிக்க சென்றது.

தண்ணீரைக் கண்டவுடன் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, குட்டி யானை குட்டையில் குதித்து விளையாடத் தொடங்கியது. தாய் யானையும் குட்டி விளையாடுவதை ஆனந்தமாக பார்த்தபடி, தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து, குட்டியின் மீது தெளித்துக் கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பார்பாரத விதமாக குட்டையில் பதுங்கியிருந்த பெரிய முதலை ஒன்று, குட்டி யானையை கவ்வி பிடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யானை, உடனடியாக முதலையை காலால் ஆவேசமாக மிதிக்கத் தொடங்கியது. ஆனால், யானையின் கோபத்தை புரிந்து கொண்ட முதலை, நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது.

இதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த உலகில் குழந்தை மீது தாயின் அன்பை விட வேறு எதுவும் பெரிதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!