பெரிய ட்விஸ்டே இருக்கு : விடுதலை பாகம் 2 பற்றி முக்கிய அப்டேட் கொடுத்த சூரி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 6:23 pm

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக விடுதலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.

கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மார்ச் 31 அன்று உலகம் முழுவதும் வெளியான ‘விடுதலை-1’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.

இப்படம் ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் விடுதலை படத்தின் அடுத்த பாகம் குறித்து நடிகர் சூரி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 735

    2

    3