உடைந்த எலும்பைக் கூட ஒட்ட வைக்கும் மகிமை மிக்க பிரண்டை!!!
Author: Hemalatha Ramkumar14 April 2023, 6:40 pm
தற்போது பெரும்பாலானவர்களின் வீடுகளில் பிரண்டை காணப்படுகிறது. பிரண்டை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வயிற்றுக்கும் இதயத்திற்கும் பிரண்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரைப்பை கோளாறுகளை சரி செய்து இதயத்தை பாதுகாக்கும்.
இந்த பதிவில் பிரண்டையின் வெவ்வேறு பயன்கள் குறித்து பார்க்கலாம்.
*பிரண்டை விழுது (துவையல்) காயம், வலி, பிடிப்பு போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
*இது ஆற்றலைத் தூண்டி சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
*இது ஞாபக சக்தியை அதிகரிக்கும், மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது.
*எலும்புகளுக்கு வலிமை தரும்.
*ஈறுகளில் ரத்தம் கசிவதை நிறுத்தும்.
*இரைப்பை சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
*வாரத்திற்கு இருமுறை எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் உடலும் சீராக இருக்கும்.
*சில சமயங்களில் இரைப்பை கோளாறு காரணமாக எலும்பு மூட்டுகள் மற்றும் நரம்பு மையங்களில் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதனால் சிலருக்கு முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படும். மேலும், இந்த திரட்டப்பட்ட திரவமானது முதுகுத்தண்டில் சளி வடிவில் பயணித்து, முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் நிரந்தரமாக அமர்ந்திருக்கும். இதன் காரணமாக தலையை எளிதில் அசைக்க முடியாது மற்றும் வலி கடுமையாக இருக்கும். இந்த நோய்க்கு பிரண்டை பேஸ்ட் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
*மனச்சோர்வு மற்றும் இரைப்பை தொடர்பான நோய்கள் செரிமானத்தின் செயல்பாட்டை பெரிய அளவில் தொந்தரவு செய்யும். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க பிரண்டை பேஸ்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
*பைல்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க பிரண்டை பயன்படுத்தப்படலாம். பைல்ஸ் பிரச்சனையால் ஆசனவாய் வாயில் இரத்தப்போக்கு வருவதை இது கட்டுப்படுத்தும். பிரண்டையை நெய்யில் வறுத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குடல்வால் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும்.
*இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அகற்ற இது உதவும். இதனால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய செயல்பாடு இயல்பாக மாறும்.
*பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி மற்றும் இடுப்பு வலிக்கு இந்த பிரண்டை பேஸ்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
*எலும்பு முறிவு குணமாக பிரண்டை பேஸ்ட் சிறந்தது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.