வருமான வரித்துறையிடமே வாங்கியிருக்கலாம்.. இதுக்கு போய் இவ்ளோ கஷ்டமா? அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2023, 8:00 pm
தமிழக சட்டசபையை முடித்துவிட்டு சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து., மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்த கேள்விக்கு.?
மத்திய அரசிடம் தான் வருமான வரித்துறை இருக்கிறது. அதில் அவர்களே கணக்கு பார்த்துக் கொள்ளலாமே எப்படி சொத்துக்கள் வந்தடைந்தது., வாட்ச் எப்படி வந்தது.? என அவர்களே கணக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
திருமங்கலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் உயிரிழந்த பெண் குறித்த கேள்விக்கு.? திங்கட்கிழமை மறுபடியும் செல்கிறேன் எனவே அப்போது அதிகாரிகளிடம் அது குறித்து விசாரித்துவிட்டு அரசாங்கம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்.
ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எது கொடுக்க வாய்ப்பு இருக்கா என்று குறித்த கேள்விக்கு.?இது குறித்து சட்டத்துறை அமைச்சர் பாரதியும் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் 15 நாட்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாக்கல் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போ அப்படி அழிக்கவில்லை என்றால் சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்று கூறினார்.