அந்த படம் ரிலீசாகாது.. மண்ணோடு மண்ணாகிவிடும்: விஜய்க்கு சாபம் விட்ட பிரபலம்..!

Author: Vignesh
15 April 2023, 2:00 pm

சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் தன்னை தானே பிரபலப்படுத்திக் கொள்ள ஏதாவது ஒன்றினை கூறி அனைவரையும் தன் பக்கம் பார்க்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தான் நடிகை திரிஷாவின் கணவர் என்று ஏ எல் சூர்யா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

al surya - Updatenews360

ஏ எல் சூர்யா இயக்குனர், இசையமைப்பாளர், ஆன்மீகவாதி என்று தன்னை பன்முகத்திறமையாளர் என்று தெரிவித்துகொண்டு சமீபகாலமாக பேட்டிக்கொடுத்து சர்ச்சையிலும் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

al surya-updatenews360

சமீபத்தில் ஏ எல் சூர்யா நடிகை திரிஷா தன்னை காதலித்ததாகவும், விக்ரம் எப்போது மரணமடைவார் என்றும், விஜய்யை மிரட்டியவாறு தகாதவார்த்தையால் திட்ட ஆரம்பித்து லியோ மற்றும் பொன்னியின் செல்வன் வரை பலரை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

al surya-updatenews360

மேலும், நடிகை திரிஷா விஜய்யின் லியோ படத்தில் நடிக்க ஆரம்பித்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும், திரிஷா யாருடனும் போட்டோ எடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் திரிஷாவுக்கும் தனக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணமாகவுள்ளதாகவும், திரிஷாவுக்கு அரசியல் பிரகாசமாக இருப்பதால் அடுத்த முதலமைச்சர் அவர் தான் என்றும், தெரிவித்து இருந்தார்.

al surya-updatenews360

இதனிடையே, பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாகாது எனவும், மாமன்னர் உத்தரவுக்கு பின் வெளியாகும் எனவும், அந்த படம் மண்ணோடு மண்ணாகிவிடும் என்று வாய்க்கு வந்த படி கூறியிருக்கிறார். மேலும், விஜய் தன் மார்க்கெட்டை இழப்பார் எனவும், நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ponniyinselvan_Trisha

மேலும், தன்னை மாமன்னராக நினைத்து தன்னை மதிக்காதவர்களை தட்டித்தூக்கிவிடுவேன் என்று பல வாய்ஜால வார்த்தைகளை தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Vijay - Updatenews360

இவரது இணையதள பக்கங்களில் திரிஷாவை தகாத வார்த்தைகளில் வர்ணித்தும் விஜய்யை கேவலமாக பேசியதை பார்த்து அவர்களின் ரசிகர்கள் ஏ எல் சூர்யாவை கடுமையாக தாக்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…