ரொம்ப சந்தோஷம்… மத்திய அரசு எடுத்த முடிவு : முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 2:01 pm

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1-ந்தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும். நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 444

    0

    0