சிபிஐயிடம் நேரடியாக புகார்.. நாள் குறிச்சாச்சு : அண்ணாமலை கொடுத்த அப்டேட்… பரபரப்பில் அரசியல் களம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2023, 6:28 pm
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று திமுக பட்டியல் தொடர்பாக சிபிஐ இடம் புகார் அளிக்க உள்ளேன்.
இதை அப்படியே விடப்போவது இல்லை. இதனால் திமுகவை சேர்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்பட போவதில்லை என்றார்.
திமுக கோப்புகள் குறித்த பட்டியல் வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில், நான் குற்றச்சாட்டிய நிறுவனங்கள் எதுவும் என்னுடையதல்ல என திமுகவை சார்ந்தவர்கள் இதுவரையில் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம், ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது, என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம். எங்கும் தப்பிச் செல்ல முடியாது. என்னுடைய போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் கூறினார்.