சினிமா வாழ்க்கையை மூட்டைக்கட்டும் சமந்தா – டிசாஸ்டர் தோல்வியால் திடீர் முடிவு – அதிர்ச்சியில் திரையுலம்!

Author: Shree
16 April 2023, 7:49 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

sakkunthalam

தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்துள்ளது என பிரபல விமர்சகர் உமைர் சந்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், சமந்தாவின் சகுந்தலம் டிசாஸ்டர் தோல்வி அடைந்து அவரது கெரியரையே காலி செய்துவிட்டது. இப்படத்தின் பெருந்தோல்வி காரணமாக சமந்தா மனவருத்தத்தில் இருக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே உடல் நோய், வாழ்க்கை பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் சமந்தாவுக்கு மீண்டும் ஓர் இடி விழுந்துள்ளதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!