திருமணமே ஆகாமல் கர்ப்பம்… நடிகர் விஜய் பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 10:12 am

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். வேறு சிலர், உங்களுக்கு திருமணம் ஆகியுள்ளதா? என்றும் குழந்தைக்கு தந்தை யாரென்றும் கேட்டு உள்ளனர்.

இதுவரை திருமணம் ஆனது பற்றி எந்த தகவலையும் இலியானா வெளியிடாத நிலையில், தனது காதலர் பெயரையும் அவர் வெளியிடவில்லை.

ஆரம்பம் முதலே தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமுறை கூட வெளியிடாத இலியானா, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்கு இடையே திருமணம் நடந்து விட்டதா? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், 2019-ம் ஆண்டில் இந்த நட்பு முடிவுக்கு வந்தது. அதனையும் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டார்.

இதையடுத்து, நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். ஒருவேளை அவரா இருக்குமோ..? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 689

    0

    2