பள்ளியில் மாணவர்களுடன் உடலுறவு… 6 ஆசிரியைகள் கைது ; அதிர்ந்து போன பெற்றோர்கள் ; போலீசார் விசாரணையில் பகீர்!!!
Author: Babu Lakshmanan18 April 2023, 10:49 am
பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் உடல் உறவு வைத்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டான்வில்லி பகுதியைச் சேர்ந்த எலன்ஷெல் (38) என்னும் பள்ளி ஆசிரியை, தான் பணிபுரிந்து வந்த பள்ளியில் படிக்கும் 16 வயது கொண்ட இரு மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மேலும், ஆசிரியையின் செயல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல, அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியை கிறிஸ்டன் காண்ட் மாணவர்களிடம் முறை தவறிய உறவில் இருந்துள்ளார். மேலும், ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் என்பவரும் மாணவர் ஒருவருடன் உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஆர்கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஹீதர்ஹேர் (32) என்ற ஆசிரியையும், ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (26) என்பவரும் தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறி ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.