மருத்துவமனையில் இருந்து சாவு வீடு வரை செல்பி தொல்லை தாங்க முடியல.. பிரபல நடிகை வருத்தம்..!

Author: Vignesh
18 April 2023, 11:30 am

மலையாள நடிகை, நவ்யா நாயர், 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் சென்றார்.

தமிழில் இவர் அறிமுகமாகிய படம் பிரசன்னா நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த அழகிய தீயே படம்தான். பிறகு பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என்று பல படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இவர் திருமணம் செய்து Lifeல Settle ஆகிவிட்டார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அந்த வகையில் தற்போது ஜானகி ஜானே என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இன்றைய சினிமா குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது, நடிப்புக்கு கேப் விட்டு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியதால், ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்களா என்று தனக்கு பதட்டம் இருந்தது. ஆனால் தான் நினைத்ததை விட ரசிகர்களிடம் இருந்து தனக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

மேலும், தற்போதைய சினிமாவில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முன்னரெல்லாம் ஹீரோ ஹீரோயினுக்கு மட்டும் கேரவன் வசதி கொடுப்பார்கள் என்றும், ஆனால் இன்று எல்லோருக்கும் கொடுக்கிறார்கள் என்றும், அது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், மேலும் தற்போது இந்த செல்பி தொல்லை அதிகமாக இருந்து வருகிறது எனவும், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்தவுடன் செல்பி எடுக்கிறார்கள்.

சொல்லப்போனால் சாவு வீட்டை கூட விட்டு வைக்கவில்லை என்றும், அங்கேயும் செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் எனவும், இது வருத்தம் அளித்தது. நிலைமையை புரிந்து ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 580

    0

    0