அன்பை விதைத்த ஐந்தறிவு ஜீவன்… சேற்றில் சிக்கிய சக யானையை காப்பாற்றிய நெகிழ்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 2:11 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் உலா வருகின்றன.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஒன்று அரேப்பாளையம் பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக செல்லும் நீரோடையில் தண்ணீர் தேடி வந்து சேற்றில் சிக்கிக் கொண்டது.

இதைக் கண்ட உடன் வந்த சகயானை சாதுருத்தியமாக சேற்றில் சிக்கிய யானையின் வால் பகுதியை இழுத்துச் சென்று மீட்டது.

https://vimeo.com/818651444

இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…