சொத்து குவிப்பு வழக்கில் திமுகவினர் கம்பி எண்ணுவது உறுதி : அர்ஜூன் சம்பத் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2023, 7:34 pm
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே இந்து சங்கம
வேல்யாத்திரை குழு சார்பில் 108 வேல் பூஜை விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆருத்ரா ஊழல் என சொல்கிறார்கள். அண்ணாமலை எந்த அரசு பதவியிலும் இல்லை அவரை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.
மான நஷ்ட ஈடு வழக்கு போடுவதாக தெரிவிக்கின்றனர். போடட்டும் அவர்கள் முறையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் பாஜகவின் லஞ்ச ஊழல் ஒழிப்பு அரசியலை அண்ணாமலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார்
என்றும் சிபிஐயில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்திலும் ஊழலை அம்பலப்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு முழு ஆதரவை இந்து மக்கள் கட்சி சார்பில் தெரிவிப்போம்.
தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக , அதிமுக கட்சியினர் செய்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களை காப்பதற்கான லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான ஒரு யுத்தம் அதிமுக திமுக என வித்தியாசம் கிடையாது என்று கூறினார்.
மேலும் கனிமொழி 800 கோடி உதயநிதி 2000 கோடி சொத்து உள்ளதாக
அண்ணாமலை கூறியது குறைவு என அனைவரும் சொல்வதாகவும்
அண்ணாமலை சட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் இந்து மக்கள் கட்சி அவருக்கு துணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்..