பரம்பரை பரம்பரையா வியாபாரம் செய்றாங்க.. தமிழக அரசு தலையீடு வேண்டும் : மீனவர்களுடன் போராட்டத்தில் இறங்கிய திருமா!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2023, 8:29 am
சென்னை நொச்சிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதை கண்டித்து நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து, மீனவர்களுடன் சாலையில் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நொச்சிக்குப்பம் மீனவர்கள் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். நாள் முழுவதும் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக இதில் தலையிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக இந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை சுத்தம் என்கிற பெயராலும், அனைவருக்கும் புதுவித மாற்றம் என்கின்ற பெயராலும், இந்த பகுதி மீனவர்களை இந்த பகுதியில் இருந்து அகற்றுவது என்பது, இயற்கை நீதிக்கு புறம்பானது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நொச்சிக்குப்பம் மீனவர்கள் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். நாள் முழுவதும் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக இதில் தலையிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.பரம்பரை பரம்பரையாக இந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை சுத்தம் என்கிற பெயராலும், அனைவருக்கும் புதுவித மாற்றம் என்கின்ற பெயராலும், இந்த பகுதி மீனவர்களை இந்த பகுதியில் இருந்து அகற்றுவது என்பது, இயற்கை நீதிக்கு புறம்பானது.
மீனவ சமூகத்தினரின் இந்த உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பாரம்பரியமான வாழ்வாதாரத்தை சிக்கலாக்க கூடிய வகையில் எந்த சட்டமும் எந்த நீதியும் அமைந்து விடக்கூடாது. அதற்கு ஏற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று இவர்களின் வசிப்பிடத்திற்கு அருகே வேறு இடத்தில் கட்டப்பட உள்ள கடைகளை இதே பகுதியில் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.