சென்னையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு : இடிபாடுகளில் 4 பேர் சிக்கித் தவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 11:48 am

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பாரிமுனை கார்னர் அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அப்பகுதியில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்டிடத்தை புனரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியார் ரவிச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 4 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?