நள்ளிரவில் நடந்த பைக் ரேஸ்… சென்னை அண்ணா சாலையில் குவிந்த இளைஞர்கள் : விரட்டி சேஸ் செய்த போலீஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 11:59 am

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர் மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து பைக் ரேஸ் சம்பவங்கள் குறைந்தது.

ஆனால் சமீப காலமாக பைக் ரேசில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், இளைஞர்கள் தொடர்ந்து பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவு 1 .30 மணி அளவில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதனை காவல் துறையின் வாகன தணிக்கையின் போது கண்டனர்.

இதனையடுத்து கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மீண்டும் இது போன்று பைக் ரேசில் இளைஞர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?