அது கூட இல்லாம கெஞ்சி இருக்கேன்.. கூட இருந்தவங்களே அவமானப்படுத்துனாங்க.. மனம் திறந்த அனிதா சம்பத்..!
Author: Vignesh20 April 2023, 2:00 pm
பிக் பாஸ் அனிதா பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.
மேலும், இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா:
இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது.
இதிலும் இவர் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அனிதாவின் புது வீடு:
இவர் தங்களின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மந்திரப்புன்னகை தொடரில் ஹீரோயினி தோழியாக நடித்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த அனிதா சம்பத் தனது ஆரம்பக் கால வேதனைகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, ஆரம்பக்காலத்தில் தான் அதிக கஷ்டப்பட்டதாகவும், பல விசயங்களுக்கு அதிகம் போராடியதாகவும் இவை எல்லாவற்றையும் தாண்டி தான் வந்ததாகவும் அனிதா சம்பத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், அனிதா செய்தி வாசிப்பாளராக வேலை செய்துக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்துக்கு கூட காசு இல்லாமல் பல நேரம் நான் தவித்திருப்பதாகவும், திடீர் செலவு என்று ஏதாவது வந்துவிட்டால் கூட ஒரு 100 ரூபாய் கையில் இல்லாமல் தவித்து இருக்கிறாராம். அப்போது கூட இருப்பவர்களிடம் பணத்துக்காக கெஞ்சி கேட்டும் யாரும் கண்டுக்கொள்ளாலாமல் அவமானப்படுத்தி விட்டதாக அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், என்னதான் டிவியில் வேலை செய்தாலும் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினை யாருக்கும் தெரியாது என்றும், பார்ப்பவர்கள் எல்லாம் சிரித்த முகத்துடன் இருப்பதால் கவலை இல்லாதவள் என்று கடந்து விடுவார்கள் எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து உங்களுக்கு நீங்களே நம்பிக்கை ஊட்டிக் கொள்ளுங்கள் என ஊக்கமளிக்கும் வகையில் தெரிவித்து இருக்கிறார்.