விஜய்யிடம் இப்படி ஒரு குணம் இருக்கா.. உண்மையை வெளியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்..!
Author: Vignesh20 April 2023, 3:00 pm
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜயை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். புரட்சி இயக்குனர் என அழைக்கப்படும் அளவிற்கு அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் சட்டம் சார்ந்தவையாகவும், புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் அமைந்திருக்கும். விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.
தளபதியின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தளபதி விஜய்யை வைத்து 7 படங்களை கொடுத்து எடுத்து தூக்கிவிட்டார்.
பல கஷ்டங்களில் இருந்தாலும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் தற்போது சண்டை இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்றாலும் விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்து வந்தது. ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான் என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியொன்றில் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசிய போது தனது குடும்பம் குறித்த முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அனுமதியின்றி, அவரது நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை, எஸ்ஏசி அரசியல் பக்கம் திருப்ப நினைத்ததாக சொல்லப்பட்டது குறித்தும், இதனால்தான் இவர்கள் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் அவர் பேசுகையில், அதில் பேசிய எஸ்.ஏ.சி, ‘விஜய் பள்ளி முடிந்தவுடன் மாலையில், வீட்டின் முன் வாசல் வழியாக வர மாட்டார் என்றும், பின் வழியாக சென்று, அங்கிருக்கும் ஒரு பைபிள் ஏரி, முதல் மாடிக்கு சென்று, அங்கிருந்து வந்து தங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்’ என தெரிவித்துள்ளார்.