தினமும் இந்த ஜூஸ் குடிச்சுட்டு வந்தா உங்க ஆசைப்படியே ஸ்லிம்மா மாறிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
20 April 2023, 5:08 pm

கொரோனா வைரஸ் பரவிய பிறகிலிருந்து ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் உடல் பருமனாக இருப்பது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவேளை உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால் உங்கள் உணவில் பூசணி சாற்றை சேர்த்து வர நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

பூசணி சாறு கலோரிகளை அதிக அளவில் எரிக்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் பூசணி சாற்றில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பூசணி சாறு குடிப்பதால் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பூசணிக்காய் சாறு செய்முறை:-
பூசணிக்காய் ஜூஸ் செய்வதற்கு ஒரு துண்டு பூசணிக்காயை தோல் சீவி எடுத்து கொள்ளவும். தோல் சீவிய பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேக வைத்துக் கொள்ளலாம். வேக வைத்த பூசணியோடு ஒரு ஆப்பிள் பழத்தை துண்டுகளாக நறுக்கி இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி கிடைக்கும் சாற்றினை தினந்தோறும் குடித்து வரவும்.

பூசணி சாறு பருகுவதால் கிடைக்கும் பலன்கள்:- தினமும் பூசணிக்காய் சாறு குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம். பூசணிக்காயில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு பூசணிக்காய் சாறு ஒரு சிறந்த மருந்து.

அதைப்போல செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதால் உடல் எடையும் சரியான முறையில் பராமரிக்கப்படும். பூசணிக்காய் சாற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக நாம் பூசணிக்காய் சாற்றை தினந்தோறும் பருகி வரும்பொழுது ஃப்ரீ ராடிக்கில்களை எதிர்த்துப் போராடக்கூடிய தெம்பு நம் உடலுக்கு கிடைக்கும். மேலும் வீக்கத்தை போக்கும் தன்மை பூசணி சாற்றுக்கு உண்டு.

வெண்பூசணி சாற்றில் 30 மில்லி அளவை ஒரு ஸ்பூன் தேனுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர இதய பலவீனம் குணமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றும் பண்பு பூசணிக்காய்க்கு உண்டு. பெண்களில் ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு ஒரு சிறந்த தீர்வாகும். இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சாறு மருந்தாக அமைகிறது.

நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருபவர்களும் பூசணிக்காய் சாற்றை தினந்தோறும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். குடலில் காணப்படும் நாடா புழுக்களை வெளியேற்ற பூசணிக்காய் சாறு உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Thalpathy 69 last flim vijay solid deal in north America வடஅமெரிக்காவில் சூப்பரான டீல் போட்ட விஜய்? மாஸ் காட்டும் தளபதி 69!
  • Views: - 415

    0

    0