ஆசையா தொட்ட ரசிகை… அசிங்கமா திட்டி தள்ளிவிட்ட நயன்தாரா – வைரல் வீடியோவால் வந்த வினை!

Author: Shree
21 April 2023, 1:33 pm

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பெறுகிறார். இருக்கு பெரிய டாப் ஹீரோக்களுக்கு இணையாக கோடானகோடி ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். பொது வெளியில் சென்றால் ரசிகர்கள் முந்தியடித்து நயன்தாராவுடன் போட்டோ எடுக்க ஆசைப்படுவார்கள். இதெல்லாம் வழக்கமான ஒன்று தான்.

அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் உள்ள தனது குல தெய்வமான காமாட்சி அம்மன் கோயிலுக்கு விக்னேஷ் சிவன் சிவனுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது ரசிகைகள் அவரை பார்க்க முந்தியடித்தனர். ஒரு ரசிகை பின்னல் இருந்து நயன்தாரா தோளில் கைவைக்க அவர் முகத்தை சுளித்துக்கொண்டு தட்டிவிடுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்கள் முழுக்க காட்டுத்தீயாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து நயன்தாரா குறித்த எந்த செய்தி வந்தாலும் ரசிகர்கள் அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து வெறுப்பை கக்கி வருகிறார்கள். நீங்க தொட்டு ரசிக்கிற அளவிற்கு அவங்க தேச தியாகியும் இல்லை. அதே மாதிரி தொட்டவுடன் மூஞ்சியை சுளிக்கும் அளவிற்கு அவங்க அவ்வளவு மோசமும் இல்லை. நம்மை போன்ற மக்கள் இல்லையேல் அவங்க இவ்வளவு Popular ஆக முடியாது. எனவே நயன்தாரா அப்படி நடந்துக்கொண்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என பலர் கூறி விமசித்துள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோவின் லிங்க்:

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!