PSLV சி55 மாதிரி ராக்கெட்டுடன் திருப்பதி மலைக்கு வந்த இஸ்ரோ குழுவினர் : சிறப்பு பூஜை செய்து வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 1:51 pm

இஸ்ரோ’வின் பி.எஸ்.எல்.வி 4 (சி.55) ராக்கெட் , சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ‘டெலியோஸ் – 02’ செயற்கைக்கோளை சுமந்தபடி நாளை பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் ஏபப்படவுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆன இஸ்ரோ நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு போன்றவற்றுக்கு பயன்படும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து, அவற்றை, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி ஆகிய வகை ராக்கெட் உதவியுடன் விண்வெளியில் செலுத்தி புவி வட்ட பாதையில் நிலை நிறுத்துகிறது.

இதுமட்டுமின்றி வணிக நோக்குடன் வர்த்தக ரீதியாகவுன் வெளிநாடுகளின் செயற்கைகோளையும் விண்ணில் நிலைநிறுத்தும் பணியிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி 4 (சி55) ராக்கெட், சிங்கப்பூரின் ‘டெலியோஸ் – 02’ செயற்கைக்கோளை சுமந்து நாளை பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைகோள், புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படக் கூடியது.

இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி 4 – (சி55) ராக்கெட் மாதிரியுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் இன்று காலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலை யானை வழிபட்டனர்.

அந்த குழுவில் இஸ்ரோவின் சந்தோஷ், யசோதா, சீனிவாச குப்தா, வனஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 474

    0

    0