சொத்து பிரித்ததில் பாகுபாடு.. குழிக்குள் இறங்கி மண்ணை போட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 5:04 pm

ஆண்டிப்பட்டி அருகே தந்தை சொத்து பிரித்ததில் பாகுபாடு கட்டியதாக கூறி விவசாயி குழிக்குள் இறங்கி மண்ணை போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்கு முகமது சுல்தான், முகமது சொகையில் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான முகமது சுல்தான் அடைக்கப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். இளையமகன் முகமது சொகையில் போடியில் பால் பண்ணை நடத்தி வருகிறார்.

காஜாமைதீனுக்கு அடைக்கப்பட்டி கிராமத்தில் 15 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் உள்ளது. இந்த சொத்துக்களை காஜாமைதீன் தனது இரண்டு மகன்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார். இதில் இளைய மகன் முகமது சொகையிலுக்கு மட்டும் அதிகமான மற்றும் அதிக மதிப்புடைய சொத்துக்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், மூத்த மகன் முகமது சுல்தான் சொத்து பிரித்து வழங்கியதில் தந்தை பாகுபாடு காட்டியதாக கூறி அடைக்கப்பட்டியில் உள்ள அவரது நிலத்தில் ஆளுயுற குழிதோண்டி, அதில் இறங்கி மண்ணை போட்டு மூடி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். மேலும் தனது கையையும் கண்ணாடியால் கீறி கொண்டார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கண்டமனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் முகமது சுல்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணிநேரத்திற்கும் மேலாக மண்ணில் இருந்ததாலும், அதிகமான ரத்தம் வெளியேறியதாலும் முகமது சுல்தான் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து பிரச்சனையால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 373

    0

    0