நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை லீக் செய்யும் பயில்வானுக்கு சம்பளம் இவ்வளவா? உண்மையை உடைத்த பிரபலம்!
Author: Vignesh22 April 2023, 10:45 am
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.
மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.
இவரின் செயலுக்கு பலர் கண்டங்களை தெரிவித்து திட்டித்தீர்த்தும் வருகிறார்கள். ஆனால் அதை மீறியும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகிறார் பயில்வான்.
இதற்காக மட்டும் பயில்வான் பல ஆயிரம் சம்பளமாக பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து நடிகை ஷகீலா அவருக்கு தன்னுடைய சேனலில் பேட்டிக்கொடுக்க எவ்வளவு காசு வாங்கினார் என்ற உண்மையை தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பேட்டியில் 60 சதவீதம் சேகரித்த செய்திகளில் இருந்து 40 சதவீதம் நானே வார்த்தைகளை சேர்த்து பேசுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், 2000, 3000, 5000 ரூபாய்-ன்னு காசு வாங்கி வாழ்வாதாரத்திற்காக தெரிவித்து வருகிறார் என்றும், தன் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டிக்கு 2000 ஆயிரம் ரூபாய் தான் காசு வாங்கினார் பயில்வான். இதை தான் அந்த உண்மையை கூற தனக்கு ரைட்ஸ் இருக்கு என ஷகீலா கூறியுள்ளார்.