சாப்பாடு போட்டுத் தர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி கணவர் செய்த கொடூரம் ; திருவள்ளூரில் பயங்கரம்!!

Author: Babu Lakshmanan
22 April 2023, 10:19 am

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே உணவு தரமறுத்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கணவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மடிமை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ரவி. அவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அவருடைய மனைவியிடம் உணவு கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆத்திரத்துடன் ஜோதியை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்தக் கொலைசம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ஜோதிக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் தனது கணவரே அவரை இரும்பு கம்பியில் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?