எடப்பாடியார் அணிக்கு தாவிய முக்கிய பிரமுகர் : ஓபிஎஸ் அணியினர் ஷாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 1:30 pm

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில் இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் தலைவலியை கொடுத்துள்ளது.

திருச்சியில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள்.

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட என்.ஜெயதேவி நேற்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மேலும் தமிழகத்தின் 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியில் இருந்து அதிமுக அணிக்கு அதாவது எடப்பாடி பழனிசாமி அணிக்கு பலரும் தாவி வருவதால் ஓபிஎஸ் அணி கடும் அதிருப்தியில் உள்ளனர். திருச்சி மாநாடு முறைப்படி நடக்குமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 475

    1

    0