இந்து முன்னணி மாநில தலைவருக்கு அனுமதி மறுப்பு… மனு கொடுக்க வந்த போது அலுவலக கதவுகள் அடைப்பு.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 4:49 pm

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் பூ, வடை, டீ, பழங்கள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுகுறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் விற்பனை செய்ய அனுமதி மறுத்து இணை ஆணையர் அவர்களை வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து சிறுகுறி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுகுறு வியாபாரிகளுக்கு ஆதரவாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் இன்று கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் மனு கொடுக்க வந்தார்.

அப்போது கோவில் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் கோவில் காவலாளிகள் அலுவலக வாயில் கதவுகளை பூட்டினார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் வாயில் கதவுகளை தள்ளிவிட்டு உள்ளே சென்று கோவில் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவில் இணை ஆணையர் கார்த்திக் கோவில் அலுவலகத்திற்குள் வருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என பேசியதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 469

    1

    0