மே 12ல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம்… திமுக அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தொழிற்சங்கங்கள்!!!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2023, 7:03 pm
தமிழக அரசு தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை கொண்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள், மற்றும் எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்த நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப்பெற கோரி, மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 27ம் தேதி இது குறித்த நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிதுள்ளனர்.