ராஜஸ்தான் அணியை தெறிக்கவிட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!!!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2023, 8:14 pm
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் போல்ட் பந்துவீச்சில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் மேக்ஸ்வெல் , டு பிளசிஸ் இணைந்தது அதிரடி காட்டினர் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்தனர்.
அரைசதம் அடித்த பிறகு தொடர்ந்து ஆடிய டு பிளசிஸ் ரன் அவுட்டில் 39 பந்துகளில் 62 ரன்களும் , மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189ரன்கள் எடுத்தது பெங்களூரு.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா,போல்ட் தலா 2 விக்கெட்டுகள் , அஸ்வின் ,சாஹல் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி 190ரன்கள் இலக்குடன் விளையாடியது.
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து படிக்கல் , ஜெய்ஸ்வால் இணைந்து சிறப்பாக ஆடினர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய இருவரும் நிலைத்து விளையாடினர். படிக்கல் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 99 ஆக இருந்தபோது படிக்கல் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜெய்ஸ்வால் 47 ரன்களும் , சாம்சன் 22 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஹெட்மையர் 3 ரன்களுக்கு ரன் அவுட்டானார்.
தொடர்ந்து ஜுரேல் சிக்ஸர் , பவுண்டரி பறக்க விட்டார். இறுதியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹர்சல் படேல் வீசினார், முதல் 3 பந்தில் 2 பவுண்டரி ,உள்பட 10 ரன்கள் எடுத்த அஸ்வின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களுரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.